உதயத்தில் முழுமதி

நீலா நீவாவா என்னருகே வாவா - வான
நிலா செல்வது போலவே செல்லாதே

அலைமோதும் காடலோரம் மனமோத நின்றேன் - கண்
வலைவீசும் நிலைபொல சுழலாட கண்டேன்
கலைமேவும் எழில்மேனி நீயாக கொண்டேன்
சிலையாகும் உன்கோலம் நான்காண மகிழ்ந்தேன்

ஆற்றங் கறைதனிலே மண்மேட்டில் நிற்கையிலே - உன்
காற்றும் வந்தென்மேலே இன்பமாய் மோதையிலே
எங்கும் நிறைந்து என்னை மயக்கையிலே
தங்கம் பொங்கும் கதிரொளி காணையிலே

காட்டினில் நிலவானேன் கானலில் நீரானேன் - மன
வீட்டினில் நீயானாய் தனிமையில் நாநானேன்
ஏட்டினில் எழுத்தானேன் படித்திட நீயானால்
பாட்டினில் பாடிடுவேன் பாரினில் உன்பேரை

தோட்டத்தின் மலரே பறித்திட துடித்தேன் - மன
தோட்டத்தில் மலர்ந்தால் சிரித்திட காணேன்
வாட்டத்தில் விட்டாய் தனிமையில் நின்றேன்
கூட்டத்தில் மறைந்தாய் கண்டிட தவரேன்

இதயத்தில் உனக்கென இடமது தந்தேன் - உன்
இதயத்தில் எனக்கென இடமது தருவாய்
உதயத்தில் தோன்றும் முழுமதி கண்டேன்
உள்ளத்தில் என்றும் மறவாது வாழ்வேன்

பிரிவினில் என்னை வாட்டிடல் நன்றோ - என்
அறிகினில் உன்னை கூட்டிடல் என்று
உறவினில் வளர்ந்தால் உனக்கென்ன குறையோ
உளமதில் துன்பம் விளைப்பதும் சரியோ

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 07-13-1967


Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்