எண்ணம் துடிக்குதடி

சின்னிடை அழைக்குது - அன்பு
சின்னவிழி துடிக்குது

எண்ண எண்ண இன்பம் பூக்குதடி - மனம்
உண்ண உண்ண தினமும் துடிக்குதடி

சின்ன உடல் நடிக்குது - அது
மின்னலென மறையுது

தொட்டு தொட்டு பார்த்திட்ட சுகமோடி - உடல்
பட்டு பட்டு கண்டிட்ட இதமோடி

முத்தமிடும் உதடுகளே - தினமும்
தித்திக்க தருவீர்களோ

வண்ண வண்ண மேனியில் நாணமெகமடி - அதை
எண்ண எண்ண உள்ளத்தில் மோகமடி

சிறுமுலை விம்முது - இன்ப
கருவிழி பறக்குது

கட்டி கட்டி உன்னை பிடித்தேனடி - நீ
தட்டி தட்டி பிரிந்ததும் ஏனடி

படர்ந்தாயே கொடிபோலே - நான்
தொடர்ந்தேனே மடிமேலே

விட்டு விட்டு இன்பத்தில் திளைத்தேனடி - நெஞ்சை
தொட்டு தொட்டு கதையும் படித்தாயடி

வாடியது உன்மேனி - காதலால்
பாடியது இத்தேனி

மெல்ல மெல்ல கண்கள் அயர்ந்தாயடி - அதை
சொல்ல சொல்ல உணர்வும் பொங்குதடி

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 07-23-1966

Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்