வள்ளியின் நாயகன்

ஓடி வாருங்கள் அன்போடு
கூடி வாருங்கள்
தேடி வாருங்கள் - முருகனை
நாடி வாருங்கள்

கந்தன் என்றால் நம்மை காப்பான்
கடம்பன் என்றால் கவலை போக்குவான்
கார்த்திகேயா என்றால் களிப்பில் ஆழ்த்துவான்
குமரன் என்றால் குனம் கூட்டுவான் - முருகனிடம்

வள்ளியின் நாயகன் வாழ்வினை நல்குவான்
வள்ளல் பெருமான் வளமையை ஊட்டுவான்
கள்ளம் அற்றோற்கு சகலமும் அவனாவான்
உள்ளம் நிறைந்தாற்கு ஊழ்வினை போக்குவான் - குகனிடம்

அவனது புகழ்பாட அருள்தனை அருள்வான்
ஆலயம் சுற்றிட ஆனந்தம் ஊட்டுவான்
அவனது எழிலுருவம் முப்பிணி அகற்றும்
ஆணவம் அகற்றினால் தன்னை நாடுவான் - சரவனனிடம்

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 03-25-1974

Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்