அதிசய கனவு

என்றுமே காணாத அதிசய கனவு - இனிய
எந்தன் கனவு அற்புத கனவு

கற்பனை அழகூட்டும் கானகம் ஒன்று - அங்கு
கலக்க நெஞ்சிற்கு அமைதியும் நன்று
கற்பாறை வெடிப்பினில் தோன்றிடும் ஊற்று
கல்லுண்ட போதையை மிஞ்சிட காற்று

ஆதவன் ஒளிதான் கண்டிட முடியாது - அங்கு
ஆழியின் ஓசையை கேட்டிட முடியாது
ஆலென படர்ந்து அரசென ஒங்கிய
அடர்ந்த மரத்தின் தன்மையினாலே அங்கு

சிந்தையை கவர்ந்திடும் சிற்ப கோபுரமும் - என்னை
சிரித்தே மய்யலுட்டும் அழகு பதுமைகளும்
சிந்தனைக் கென்றே உருக்கொண்ட இடமோ
சிலையாக்கி என்னை அர்பணிக்க தகுமோ

புள்ளினம் இசைத்திடும் கீதத்தின் ஓசையே
புலனையும் கவர்ந்திட்ட மெல்லிய நாதமே
புல்லறி வாளர்கள் வெறுத்திடும் இடமே
புனிதம் தவழும் தூய்மை மணமே

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 03-10-1968

Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்