பணத்தின் விளையாட்டு

காசும் பணமும் சேரும் - அதணால்
காரியம் யாவும் கூடும் - அது
நாடுவோரிடம் என்றும் செல்லாது - அது
கூடுவோரிடம் அமைதி இருக்காது

வறுமை பிணியும் சேரும் - உடன்
சிறுமைச் சிரிப்பும் கூடும் - அது
வந்ததும் இவைகள் நாடாது - எது
வந்தாலும் எதிர்த்திட முடியாது

பதவியும் மதிப்பும் சேரும் - எங்கும்
பக்க வாத்தியமும் கூடும் - அது
சென்றதும் ஒருவரையும் கூட்டாது - எங்கு
சென்றிடனும் உதவியும் கூடாது

நீதியும் நேர்மையும் எங்கே - அது
கதியற்று போயிடும் இங்கே - நன்
மதியால் வென்றிட முடியாது - நினைத்த
கதியில் வந்திட தயங்காது

உன்விதி அதுவானால் எனக்கென்ன - இங்கே
என்விதி இதுவானால் உனக்கென்ன - அது
என்றே கூறிடத் தயங்காது - இதனால்
சான்றோரை இகழ்ந்திட தயங்காது

பணமே உன்னிலை இதுவானால் - இங்கு
குணமே உன்கதி என்னாவது - நற்
பண்பு குலைந்திடல் நன்றாகுமோ - இந்த
துன்பம் விடிவதும் என்றாகுமோ?

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 12-08-1966

Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்