முத்தம்மா

சிரிக்காதே சிரிக்காதே முத்தம்மா - நீ
சிரிப்பதற்கும் வரிவிதிப்பார் தெரியுமா
சிந்தனையோ சிந்தனையோ முத்தம்மா - உன்
சிந்தனைக்கும் தடைவிதிப்பார் தெரியுமா

பார்க்காதே உலகத்தை முத்தம்மா - அது
பயங்கரத்தில் முதலிடம் புரியுமா
நேர்மையை நினைக்காதே முத்தம்மா - அது
உன்னையே மாய்த்திடும் புரியுமா

ஆள்வோரை கண்டுமே முத்தம்மா - நீ
அழுதாலும் விளங்காது தெரியுமா
புரியாத மக்களுக்கு முத்தம்மா - நீ
புரியாத புதிராவாய் தெரியுமா

உழைப்போரை நாடாதே முத்தம்மா -அவர்களுக்கு
பட்டினியும் புதிதல்ல புரியுமா
உண்மையை கூறாதே முத்தம்மா
உன்னையே பழிவாங்கும் புரியுமா

இன்றைய சமுதாயம் முத்தம்மா - மணம்
இருப்போர்க்கே சொந்தம் தெரியுமா
இல்லாரை காணும்போது முத்தம்மா - உன்
இதயத்தை இரும்பாக்க தெரியுமா

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 10-13-1965

Comments

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்