களை எடுப்போம்

களை எடுப்போம் வாருங்கள் கயவர்கள் உள்ளத்திலே - புது
கலை யூட்டும் எளியோர்க்கு வறுமையை அகற்றியே

போர்கோளம் புகழ்கோளம் பதவிக்கு
நேர்மையற்ற வழிகோலும் இவ்வாட்சி
கார்கால மேகமாய் ஆக்குதே
ஏர்பிடித்தோர் செழுத்திட இப்புவியில் (களை எடுப்போம்)

அன்னியன் வெறிச்செயல் ஒருபுரம்
அற்பரின் தீச்செயல் மறுபுரம்
அன்பிலா ஆட்சியில் அழிவதோ
அறிந்தவர் ஓய்ந்திட விடுவதோ (களை எடுப்போம்)

விலையேற்றம் வரியேற்றம் இரண்டும்
சிலையாக்குதே எளியோர் நெஞ்சை
பணயேற்றம் பதவியேற்றம் கொண்டோர்
பண்பைதான் குலைப்பதை தவிர்த்திட (களை எடுப்போம்)

பசித்தவர் துயர்தனை தீர்த்தே
நசித்தவர் சொல்தனை கேட்டே
புசித்திட வகைதனை தேடியே
பேசியேவீனாக போவோர்தனை தெறுதலிட (களை எடுப்போம்)

அழுபவர் கண்களை துடைத்தே
தொழுபவர் தங்களை காத்தே
கழுவாகும் தீயோரை புழுவாக்கி
எழுவோம் நலம்பல கண்டிட (களை எடுப்போம்)

ஏய்ப்பவரை ஏய்த்தே எழிலூட்டி
வாய்பேச்சு வீரரை செயலாக்கி
வாய்மையும் செழுமையும் குலுங்கிட
தேய்ந்தவர் சிரித்தே மகிழ்ந்திட (களை எடுப்போம்)

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 07-13-1966

Comments

NambikkaiRAMA said…
arumai arumai aRputham!

Popular posts from this blog

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்