தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்
தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்
பட்டதும் மகிழ்ந்தேன் நெஞ்சில் - உள்ளம்
விட்டதும் மகிழ்ந்தேன் நாணத்தில் - தனிமை
கெட்டதும் மகிழ்ந்தேன் பிணைப்பில் - அன்பில் (தொட்டதும்)
காதல் பொங்கிடும் ஆழியின் ஒரம் - அலை
மோதல் தந்திடும் நெஞ்சத்தின் சாரம்
வாதல் துவண்டிடும் நாமினைந்திடும் நேரம் - மனம்
நோதல் தீர்ந்திடும் அனைத்திடும் கரம் (தொட்டதும்)
பூங்கொடி அவளோ கைகளில் துவண்டாள் - பால்
சங்கான கழுத்திலே கரமாலை சுட்டினேன்
செங்கொடி முகத்திலே முத்தையும் சிந்திட்டாள் - அழகு
பாங்கான உடலிலே முத்தத்தையும் சூட்டினேன் (தொட்டதும்)
தென்றல் இளங் காற்றின் மயக்கத்திலே - இனிய
கன்னல் மொழிப் பேச்சின் போதையிலே
அன்புக் கடலில் மூழ்கி நீந்தினேன் - ஆடை
இன்பக் கூடலில் முத்தையும் எடுத்திட்டேன் (தொட்டதும்)
துன்பம் மறைந்தது துடியிடை கண்டவுடன் - நம்
எண்ணம் நிறைந்தது துயிலாடை கொண்டவுடன்
இன்பம் இன்பமே சிறந்து கொண்டாடினோம் - மெய்
வண்ணம் இணைந்தது களிப்பினில் மூழ்கிவிட்டோம் (தொட்டதும்)
திங்கள் தூதினிலே என்னுடன் வந்தவளே - செவ்வாயில்
அங்கம் முழுவதின் அழகை தந்தவளே
முழுமத் மைந்தன் நாளினதை நினைந்தேனே - எந்தன்
செழுமதி உந்தனை கவிதையில் வடித்தேனே
ஆக்கம்: மு.பசுபதி நாள்: 01-10-1969

Comments
Senthil
கவிதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் இந்தக் கவிதையை உபயோகிக்கலாம். ஆனால் இயற்றியவர் பெயரையும், ஊடகத்தின் முகவரியையும் கவிதையுடன் இணைத்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்னுடைய ஸென் கதைகளையும் படித்து பார்த்து உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.
நன்றி.
அலங்கார சொல்லாற்றலும் அமிழ்தென இனிக்கும் கற்பனையும் மிகச்சிறப்பே.
நன்றிகளுடன்,
ஜேசுராஜ்.
இந்தக் கவிதையை இயற்றியவர் எனது தந்தை.. அவருக்கே உங்களுடைய வாழ்த்துக்கள் சேரும். உங்களுடைய மறுமொழிக்கு மிகுந்த நன்றி.
vous ne vous ГЄtes pas trompГ©s, tout exactement acheter cialis en ligne achat cialis [url=http://www.ci2s.org]cialis[/url]
http://www.nyynews.com/phpBB3/viewtopic.php?f=5&t=149263&p=208873
http://gadogado.informe.com/forum/posting.php?mode=reply&f=8&t=9
http://sizegenetics-reviewx.tumblr.com/