பாயாது நெஞ்சம்

ஓடிவா அய்யப்பனை காண
நாடிவா அய்யப்பனை காண
தேடிவா அய்யப்பனை காண
கூடிவா அய்யப்பனை காண

மணிகண்டன் புகழ் பாடுவோம்
என்னாளும் நாமே
துணிவோடு நாமும் செல்வோம்
சபரிமலை காண
துணையோடு பூஜை போடுவோம்
கணிவாக நாமே
இணையாக கூடி ஓடுவோம்
சாஸ்தாவை காண

ஓயாது கூறுவோம் அவன்
திருநாமம் தன்னை
தேயாது பாதம் அவன்
மலை நோக்கி செல்ல
பாயாது நெஞ்சம் அவன்
திருமேனி கானுமுன்னே

ஆக்கம்: மு.பசுபதி

Comments

Popular posts from this blog

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்