மாமல்லபுரம்

மாமல்ல புரத்தில் நான் இருந்தேன் - என்
மனதில் உன்னையே நினைந் திருந்தேன்
மங்காத கலைமேவும் அழகுச் சிற்பத்திலே - அங்கு
மங்கையே ஆடிய துந்தன் சிற்றிடையே

பல்லவர் வாழ்க்கையின் கலை ஆர்வம் - இன்று
பல்லோர் கண்டுதான் களிப் படைகின்றார்
பழ்ந்தமிழ் ஏட்டின் சுவை சேர்த்து - என்
பண்பட்ட மனதிலே உணர் ஊட்ட

கல்லும் கதைசொல்ல கற்பனை எனையல்ல - அன்பு
கற்கண்டு மொழியும் என்னை வெல்ல
காவியச் சுவையுட்ட காரிகை எனைவாட்ட - நம்
காதல் கதைஎண்ணி நெஞ்சம் தாலட்ட

ஆழியின் அலையும் அயர்ந்தே விளையாட - அங்கு
ஆதவன் ஒளியாலே வெள்ளலை மின்னவே
ஆறாத துயர்மாறி அமைதியும் துணைநாட - அன்று
ஆண்டவன் புகழ்பேசி இன்றால்வோரை நினைத்தே

அறியனை அமர்ந்தார் அறநிலை மறந்தார் - இன்று
அறியாத மூடராய் மக்களும் திகழ்ந்தார்
அவநிலை தீர்ந்தே வறிஞரும் தெளிந்தே - தூய
அறிஞரும் உயர்ந்தே எளிமையை திருத்திடவே

நெஞ்சம் இனிக்கும் அன்பு வளர்ந்தால் - என்
சஞ்சலம் தீர்ந்திடும் உன்னன்பு கிடைத்தால்
வஞ்சகம் அழகல்ல இணைந்தபின் பிரியாதே - உறக்கம்
மஞ்சம் அழைத்தாலும் உன்னினைவு வாட்டுதே

ஆக்கம்: மு.பசுபதி நாள்: 04-12-1966

Comments

Thiagarajan.E said…
Dear Mr.Ganga,
Nice to meet you.
Your blogs are veru superb.
Keep in touch.
With Reg,
E.Thiagarajan

Popular posts from this blog

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்