Posts

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில்

திருவாசகம் - இளையராஜாவின் இன்னிசையில் இளையராஜாவின் இன்னிசையில் வந்த திருவாசகத்தினை சமிபத்தில் YouTube' ல் கேட்க நேர்ந்தது.   அச்சப் பத்து என்ற 10 பாடல்களிலிருந்து 6 பாடல்களை புற்றின் வாழ் என்ற பாடல் துவங்கி கோணிலா வாளி என்ற பாடலில் முடித்து இருப்பார். பாடலும் அதன் பொருளும் அருகில் இருந்தால் கேட்பதற்கு மேலும் இரசனையுடன் இருக்கும் என்ற எண்ணத்தில் சில பல வலைகளில் பாடலையும் பொருளையும் தெரிந்து கொண்டு அதனைப் படிப்பதற்கு எளிமைப் படுத்தி கொடுத்து இருக்கிறேன். YouTube link 1: https://www.youtube.com/watch?v=7ybaAjdKa5s YouTube link 2: https://www.youtube.com/watch?v=-XuO4CR7fzI பாடலைப் பொருளுடன் கேட்டு விட்டு உங்களின் கருத்தினை பின்னுட்டத்தில் தெரிவிக்கவும். பாடல்: புற்றில் வாள் அரவும் அஞ்சேன் ; பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன் ; கற்றை வார் சடை எம் அண்ணல் , கண் நுதல் , பாதம் நண்ணி , மற்றும் ஓர் தெய்வம் தன்னை உண்டு என நினைந்து , எம் பெம்மாற்கு அற்றிலாதவரைக் கண்டால் , அம்ம! நாம் அஞ்சுமாறே! பொருள்: புற்றில் வளைந்து இருக்கும் பாம்பைக் கண்டு அ

அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?

நான் முதன் முதலில் வலைப் பூக்கள் ஆரம்பித்து என்னுடைய தந்தை எழுதிய சில மரபுக் கவிதைகளை பிரசுரித்தேன். இந்தியாவில் இருந்து வரும் போது, என் தந்தை எழுதியிருந்த சில கவிதை புத்தகங்களை சுருட்டிக் கொண்டு வந்து அதில் எனக்கு பிடித்த சில கவிதைகளைக் கொடுத்திருந்தேன். ஆனால், என் அப்பா எழுதிய பல கவிதைகள் காதலும், அவருடைய வாழ்வின் சில நெருக்கடி நேரத்தில் தோன்றிய எண்ணங்களையும், அவரிடம் கேட்காமல் இங்கு போடுவது முறையாகது என்பதனால் இந்த வலைப் பூவை கண்டு கொள்ளாமலே விட்டு விட்டேன். சரி, நானும் பெயருக்கு கவிதை என்று சில வரிகளைக் கிறுக்குவது உண்டு. நான் முதன் முதலில் அமெரிக்கா வந்த போது, கெண்டகியில் (Kentucky) உள்ள லூயிவில்லிற்கு (Louisville) வந்தேன். அது ஒரு அக்டோபர் மாதம், 2000 ஆம் ஆண்டு, வந்த இரண்டு வாரங்களிலேயே வெண் பனியும், உறைய வைக்கும் பனியும் ஆரம்பித்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து தினம் 20 நிமிடம் நடந்தே அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களின் உறைபனியும், கடுங்குளிரும் தாள முடியவில்லை. என்னுடைய சத்தியம் அலுவலகமோ மூன்று மாதங்களே பணி என்று கூறியதால், வாகனம் வாங்கவில்லை. டாக்ஸ

ஓம்கார ரூபன்

அயன் அரி சக்தியே ஐய்யப்பா ஆருமுகன் தம்பியின் அருளே ஐய்யப்பா இயற்கை சக்தியின் தலைவா ஐய்யப்பா ஈதலைக் காத்தருள் புரிவாய் ஐய்யப்பா உலகினை உய்விக்க வந்தவளே ஐய்யப்பா ஊனுயிர் உனையே பணிந்திட ஐய்யப்பா என்றும் உந்தனை நினைந்திட ஐய்யப்பா ஏற்றம் அருள்வாய் இகத்தில் ஐய்யப்பா ஐய்யம் அகற்றி அருள்வாய் ஐய்யப்பா ஒல்லும் வழிதனை அளிப்பாய் ஐய்யப்பா ஓம்கார ருபனின் சகோதரா ஐய்யப்பா ஔடதமாய் எங்களை காப்பாய் ஐய்யப்பா ஐய்யப்பன் நின்னடி போற்றினோம் ஐய்யப்பா சரணம் புகுந்தோம் தேற்றுவாய் ஐய்யப்பா கல்வியும் கலையும் திருவும் வீரமும் கவிந்த உலகினை காப்பாய் ஐய்யப்பா ஆக்கம்: மு.பசுபதி

முத்தம்மா

சிரிக்காதே சிரிக்காதே முத்தம்மா - நீ சிரிப்பதற்கும் வரிவிதிப்பார் தெரியுமா சிந்தனையோ சிந்தனையோ முத்தம்மா - உன் சிந்தனைக்கும் தடைவிதிப்பார் தெரியுமா பார்க்காதே உலகத்தை முத்தம்மா - அது பயங்கரத்தில் முதலிடம் புரியுமா நேர்மையை நினைக்காதே முத்தம்மா - அது உன்னையே மாய்த்திடும் புரியுமா ஆள்வோரை கண்டுமே முத்தம்மா - நீ அழுதாலும் விளங்காது தெரியுமா புரியாத மக்களுக்கு முத்தம்மா - நீ புரியாத புதிராவாய் தெரியுமா உழைப்போரை நாடாதே முத்தம்மா -அவர்களுக்கு பட்டினியும் புதிதல்ல புரியுமா உண்மையை கூறாதே முத்தம்மா உன்னையே பழிவாங்கும் புரியுமா இன்றைய சமுதாயம் முத்தம்மா - மணம் இருப்போர்க்கே சொந்தம் தெரியுமா இல்லாரை காணும்போது முத்தம்மா - உன் இதயத்தை இரும்பாக்க தெரியுமா ஆக்கம்: மு.பசுபதி நாள்: 10-13-1965

உதயத்தில் முழுமதி

நீலா நீவாவா என்னருகே வாவா - வான நிலா செல்வது போலவே செல்லாதே அலைமோதும் காடலோரம் மனமோத நின்றேன் - கண் வலைவீசும் நிலைபொல சுழலாட கண்டேன் கலைமேவும் எழில்மேனி நீயாக கொண்டேன் சிலையாகும் உன்கோலம் நான்காண மகிழ்ந்தேன் ஆற்றங் கறைதனிலே மண்மேட்டில் நிற்கையிலே - உன் காற்றும் வந்தென்மேலே இன்பமாய் மோதையிலே எங்கும் நிறைந்து என்னை மயக்கையிலே தங்கம் பொங்கும் கதிரொளி காணையிலே காட்டினில் நிலவானேன் கானலில் நீரானேன் - மன வீட்டினில் நீயானாய் தனிமையில் நாநானேன் ஏட்டினில் எழுத்தானேன் படித்திட நீயானால் பாட்டினில் பாடிடுவேன் பாரினில் உன்பேரை தோட்டத்தின் மலரே பறித்திட துடித்தேன் - மன தோட்டத்தில் மலர்ந்தால் சிரித்திட காணேன் வாட்டத்தில் விட்டாய் தனிமையில் நின்றேன் கூட்டத்தில் மறைந்தாய் கண்டிட தவரேன் இதயத்தில் உனக்கென இடமது தந்தேன் - உன் இதயத்தில் எனக்கென இடமது தருவாய் உதயத்தில் தோன்றும் முழுமதி கண்டேன் உள்ளத்தில் என்றும் மறவாது வாழ்வேன் பிரிவினில் என்னை வாட்டிடல் நன்றோ - என் அறிகினில் உன்னை கூட்டிடல் என்று உறவினில் வளர்ந்தால் உனக்கென்ன குறையோ உளமதில் துன்பம் விளைப்பதும் சரியோ

களை எடுப்போம்

களை எடுப்போம் வாருங்கள் கயவர்கள் உள்ளத்திலே - புது கலை யூட்டும் எளியோர்க்கு வறுமையை அகற்றியே போர்கோளம் புகழ்கோளம் பதவிக்கு நேர்மையற்ற வழிகோலும் இவ்வாட்சி கார்கால மேகமாய் ஆக்குதே ஏர்பிடித்தோர் செழுத்திட இப்புவியில் (களை எடுப்போம்) அன்னியன் வெறிச்செயல் ஒருபுரம் அற்பரின் தீச்செயல் மறுபுரம் அன்பிலா ஆட்சியில் அழிவதோ அறிந்தவர் ஓய்ந்திட விடுவதோ (களை எடுப்போம்) விலையேற்றம் வரியேற்றம் இரண்டும் சிலையாக்குதே எளியோர் நெஞ்சை பணயேற்றம் பதவியேற்றம் கொண்டோர் பண்பைதான் குலைப்பதை தவிர்த்திட (களை எடுப்போம்) பசித்தவர் துயர்தனை தீர்த்தே நசித்தவர் சொல்தனை கேட்டே புசித்திட வகைதனை தேடியே பேசியேவீனாக போவோர்தனை தெறுதலிட (களை எடுப்போம்) அழுபவர் கண்களை துடைத்தே தொழுபவர் தங்களை காத்தே கழுவாகும் தீயோரை புழுவாக்கி எழுவோம் நலம்பல கண்டிட (களை எடுப்போம்) ஏய்ப்பவரை ஏய்த்தே எழிலூட்டி வாய்பேச்சு வீரரை செயலாக்கி வாய்மையும் செழுமையும் குலுங்கிட தேய்ந்தவர் சிரித்தே மகிழ்ந்திட (களை எடுப்போம்) ஆக்கம்: மு.பசுபதி நாள்: 07-13-1966

தவநிலையப்பா

காணுமுன் துடிப்ப தென்ன ஐயப்பா கண்டபின் மகிழ்வ தென்ன ஐயப்பா காலினால் நடப்ப தென்ன ஐயப்பா களிப்பூட்ட வைப்ப தற்கோ ஐயப்பா காட்டினில் இருப்ப தென்ன ஐயப்பா கருனைமழை பொழிவ தற்கோ ஐயப்பா சபரிமலை வாழ்வ தென்ன ஐயப்பா சலித்தோரை காப்ப தற்கோ ஐயப்பா தவநிலை கொண்ட தென்ன ஐயப்பா தர்மம் தழைப்ப தற்கோ ஐயப்பா தண்வினை சூழ்வ தென்ன ஐயப்பா தர்மசாஸ்தா காண்ப தற்கோ ஐயப்பா ஆக்கம்: மு.பசுபதி

பாயாது நெஞ்சம்

ஓடிவா அய்யப்பனை காண நாடிவா அய்யப்பனை காண தேடிவா அய்யப்பனை காண கூடிவா அய்யப்பனை காண மணிகண்டன் புகழ் பாடுவோம் என்னாளும் நாமே துணிவோடு நாமும் செல்வோம் சபரிமலை காண துணையோடு பூஜை போடுவோம் கணிவாக நாமே இணையாக கூடி ஓடுவோம் சாஸ்தாவை காண ஓயாது கூறுவோம் அவன் திருநாமம் தன்னை தேயாது பாதம் அவன் மலை நோக்கி செல்ல பாயாது நெஞ்சம் அவன் திருமேனி கானுமுன்னே ஆக்கம்: மு.பசுபதி

வள்ளியின் நாயகன்

ஓடி வாருங்கள் அன்போடு கூடி வாருங்கள் தேடி வாருங்கள் - முருகனை நாடி வாருங்கள் கந்தன் என்றால் நம்மை காப்பான் கடம்பன் என்றால் கவலை போக்குவான் கார்த்திகேயா என்றால் களிப்பில் ஆழ்த்துவான் குமரன் என்றால் குனம் கூட்டுவான் - முருகனிடம் வள்ளியின் நாயகன் வாழ்வினை நல்குவான் வள்ளல் பெருமான் வளமையை ஊட்டுவான் கள்ளம் அற்றோற்கு சகலமும் அவனாவான் உள்ளம் நிறைந்தாற்கு ஊழ்வினை போக்குவான் - குகனிடம் அவனது புகழ்பாட அருள்தனை அருள்வான் ஆலயம் சுற்றிட ஆனந்தம் ஊட்டுவான் அவனது எழிலுருவம் முப்பிணி அகற்றும் ஆணவம் அகற்றினால் தன்னை நாடுவான் - சரவனனிடம் ஆக்கம்: மு.பசுபதி நாள்: 03-25-1974

பணத்தின் விளையாட்டு

காசும் பணமும் சேரும் - அதணால் காரியம் யாவும் கூடும் - அது நாடுவோரிடம் என்றும் செல்லாது - அது கூடுவோரிடம் அமைதி இருக்காது வறுமை பிணியும் சேரும் - உடன் சிறுமைச் சிரிப்பும் கூடும் - அது வந்ததும் இவைகள் நாடாது - எது வந்தாலும் எதிர்த்திட முடியாது பதவியும் மதிப்பும் சேரும் - எங்கும் பக்க வாத்தியமும் கூடும் - அது சென்றதும் ஒருவரையும் கூட்டாது - எங்கு சென்றிடனும் உதவியும் கூடாது நீதியும் நேர்மையும் எங்கே - அது கதியற்று போயிடும் இங்கே - நன் மதியால் வென்றிட முடியாது - நினைத்த கதியில் வந்திட தயங்காது உன்விதி அதுவானால் எனக்கென்ன - இங்கே என்விதி இதுவானால் உனக்கென்ன - அது என்றே கூறிடத் தயங்காது - இதனால் சான்றோரை இகழ்ந்திட தயங்காது பணமே உன்னிலை இதுவானால் - இங்கு குணமே உன்கதி என்னாவது - நற் பண்பு குலைந்திடல் நன்றாகுமோ - இந்த துன்பம் விடிவதும் என்றாகுமோ? ஆக்கம்: மு.பசுபதி நாள்: 12-08-1966

எண்ணம் துடிக்குதடி

சின்னிடை அழைக்குது - அன்பு சின்னவிழி துடிக்குது எண்ண எண்ண இன்பம் பூக்குதடி - மனம் உண்ண உண்ண தினமும் துடிக்குதடி சின்ன உடல் நடிக்குது - அது மின்னலென மறையுது தொட்டு தொட்டு பார்த்திட்ட சுகமோடி - உடல் பட்டு பட்டு கண்டிட்ட இதமோடி முத்தமிடும் உதடுகளே - தினமும் தித்திக்க தருவீர்களோ வண்ண வண்ண மேனியில் நாணமெகமடி - அதை எண்ண எண்ண உள்ளத்தில் மோகமடி சிறுமுலை விம்முது - இன்ப கருவிழி பறக்குது கட்டி கட்டி உன்னை பிடித்தேனடி - நீ தட்டி தட்டி பிரிந்ததும் ஏனடி படர்ந்தாயே கொடிபோலே - நான் தொடர்ந்தேனே மடிமேலே விட்டு விட்டு இன்பத்தில் திளைத்தேனடி - நெஞ்சை தொட்டு தொட்டு கதையும் படித்தாயடி வாடியது உன்மேனி - காதலால் பாடியது இத்தேனி மெல்ல மெல்ல கண்கள் அயர்ந்தாயடி - அதை சொல்ல சொல்ல உணர்வும் பொங்குதடி ஆக்கம்: மு.பசுபதி நாள்: 07-23-1966

மாமல்லபுரம்

மாமல்ல புரத்தில் நான் இருந்தேன் - என் மனதில் உன்னையே நினைந் திருந்தேன் மங்காத கலைமேவும் அழகுச் சிற்பத்திலே - அங்கு மங்கையே ஆடிய துந்தன் சிற்றிடையே பல்லவர் வாழ்க்கையின் கலை ஆர்வம் - இன்று பல்லோர் கண்டுதான் களிப் படைகின்றார் பழ்ந்தமிழ் ஏட்டின் சுவை சேர்த்து - என் பண்பட்ட மனதிலே உணர் ஊட்ட கல்லும் கதைசொல்ல கற்பனை எனையல்ல - அன்பு கற்கண்டு மொழியும் என்னை வெல்ல காவியச் சுவையுட்ட காரிகை எனைவாட்ட - நம் காதல் கதைஎண்ணி நெஞ்சம் தாலட்ட ஆழியின் அலையும் அயர்ந்தே விளையாட - அங்கு ஆதவன் ஒளியாலே வெள்ளலை மின்னவே ஆறாத துயர்மாறி அமைதியும் துணைநாட - அன்று ஆண்டவன் புகழ்பேசி இன்றால்வோரை நினைத்தே அறியனை அமர்ந்தார் அறநிலை மறந்தார் - இன்று அறியாத மூடராய் மக்களும் திகழ்ந்தார் அவநிலை தீர்ந்தே வறிஞரும் தெளிந்தே - தூய அறிஞரும் உயர்ந்தே எளிமையை திருத்திடவே நெஞ்சம் இனிக்கும் அன்பு வளர்ந்தால் - என் சஞ்சலம் தீர்ந்திடும் உன்னன்பு கிடைத்தால் வஞ்சகம் அழகல்ல இணைந்தபின் பிரியாதே - உறக்கம் மஞ்சம் அழைத்தாலும் உன்னினைவு வாட்டுதே ஆக்கம்: மு.பசுபதி நாள்: 04-12-1966

அதிசய கனவு

என்றுமே காணாத அதிசய கனவு - இனிய எந்தன் கனவு அற்புத கனவு கற்பனை அழகூட்டும் கானகம் ஒன்று - அங்கு கலக்க நெஞ்சிற்கு அமைதியும் நன்று கற்பாறை வெடிப்பினில் தோன்றிடும் ஊற்று கல்லுண்ட போதையை மிஞ்சிட காற்று ஆதவன் ஒளிதான் கண்டிட முடியாது - அங்கு ஆழியின் ஓசையை கேட்டிட முடியாது ஆலென படர்ந்து அரசென ஒங்கிய அடர்ந்த மரத்தின் தன்மையினாலே அங்கு சிந்தையை கவர்ந்திடும் சிற்ப கோபுரமும் - என்னை சிரித்தே மய்யலுட்டும் அழகு பதுமைகளும் சிந்தனைக் கென்றே உருக்கொண்ட இடமோ சிலையாக்கி என்னை அர்பணிக்க தகுமோ புள்ளினம் இசைத்திடும் கீதத்தின் ஓசையே புலனையும் கவர்ந்திட்ட மெல்லிய நாதமே புல்லறி வாளர்கள் வெறுத்திடும் இடமே புனிதம் தவழும் தூய்மை மணமே ஆக்கம்: மு.பசுபதி நாள்: 03-10-1968

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள்

தொட்டதும் மகிழ்ந்தேன் மெய்யில் - கண்கள் பட்டதும் மகிழ்ந்தேன் நெஞ்சில் - உள்ளம் விட்டதும் மகிழ்ந்தேன் நாணத்தில் - தனிமை கெட்டதும் மகிழ்ந்தேன் பிணைப்பில் - அன்பில் (தொட்டதும்) காதல் பொங்கிடும் ஆழியின் ஒரம் - அலை மோதல் தந்திடும் நெஞ்சத்தின் சாரம் வாதல் துவண்டிடும் நாமினைந்திடும் நேரம் - மனம் நோதல் தீர்ந்திடும் அனைத்திடும் கரம் (தொட்டதும்) பூங்கொடி அவளோ கைகளில் துவண்டாள் - பால் சங்கான கழுத்திலே கரமாலை சுட்டினேன் செங்கொடி முகத்திலே முத்தையும் சிந்திட்டாள் - அழகு பாங்கான உடலிலே முத்தத்தையும் சூட்டினேன் (தொட்டதும்) தென்றல் இளங் காற்றின் மயக்கத்திலே - இனிய கன்னல் மொழிப் பேச்சின் போதையிலே அன்புக் கடலில் மூழ்கி நீந்தினேன் - ஆடை இன்பக் கூடலில் முத்தையும் எடுத்திட்டேன் (தொட்டதும்) துன்பம் மறைந்தது துடியிடை கண்டவுடன் - நம் எண்ணம் நிறைந்தது துயிலாடை கொண்டவுடன் இன்பம் இன்பமே சிறந்து கொண்டாடினோம் - மெய் வண்ணம் இணைந்தது களிப்பினில் மூழ்கிவிட்டோம் (தொட்டதும்) திங்கள் தூதினிலே என்னுடன் வந்தவளே - செவ்வாயில் அங்கம் முழுவதின் அழகை தந்தவளே முழுமத் மைந்தன் நாளினதை நினைந்தேனே