அந்த வசந்த அமெரிக்கா எங்கே போனது?
நான் முதன் முதலில் வலைப் பூக்கள் ஆரம்பித்து என்னுடைய தந்தை எழுதிய சில மரபுக் கவிதைகளை பிரசுரித்தேன். இந்தியாவில் இருந்து வரும் போது, என் தந்தை எழுதியிருந்த சில கவிதை புத்தகங்களை சுருட்டிக் கொண்டு வந்து அதில் எனக்கு பிடித்த சில கவிதைகளைக் கொடுத்திருந்தேன். ஆனால், என் அப்பா எழுதிய பல கவிதைகள் காதலும், அவருடைய வாழ்வின் சில நெருக்கடி நேரத்தில் தோன்றிய எண்ணங்களையும், அவரிடம் கேட்காமல் இங்கு போடுவது முறையாகது என்பதனால் இந்த வலைப் பூவை கண்டு கொள்ளாமலே விட்டு விட்டேன். சரி, நானும் பெயருக்கு கவிதை என்று சில வரிகளைக் கிறுக்குவது உண்டு. நான் முதன் முதலில் அமெரிக்கா வந்த போது, கெண்டகியில் (Kentucky) உள்ள லூயிவில்லிற்கு (Louisville) வந்தேன். அது ஒரு அக்டோபர் மாதம், 2000 ஆம் ஆண்டு, வந்த இரண்டு வாரங்களிலேயே வெண் பனியும், உறைய வைக்கும் பனியும் ஆரம்பித்தது. நான் தங்கியிருந்த இடத்திலிருந்து தினம் 20 நிமிடம் நடந்தே அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். நவம்பர், டிசம்பர் மாதங்களின் உறைபனியும், கடுங்குளிரும் தாள முடியவில்லை. என்னுடைய சத்தியம் அலுவலகமோ மூன்று மாதங்களே பணி என்று கூறியதால், வாகனம் வாங்கவில்லை. டாக்ஸ...